சிதம்பரம் பகுதியில் தகுதிச் சான்று இல்லாத வாகனங்களுக்கு அபராதம்! - Seithipunal
Seithipunal


சிதம்பரம் பகுதியில் நடைபெற்ற வாகன சோதனையில் தகுதி சான்றிதழ் பெறாமல் 6 ஆட்டோக்கள் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்கப்படும்:

சிதம்பரம் பகுதியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அருணாசலம் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் விமலா அதிரடி சோதனை நடத்தினார். அப்போது தகுதி சான்றிதழ் பெறாமல், பள்ளிக் குழந்தைகளை ஏற்றிக்கொண்டு சென்ற வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தனர்.  

அந்த சோதனையில் ஓட்டுநர் உரிமம், காப்புச் சான்று ஆகியவை இல்லாமல் பல வாகனங்கள் இருந்தது தெரியவந்தது. பள்ளி குழந்தைகளை ஏற்றி சென்ற 6 ஆட்டோக்கள் சிறைபிடிக்கப்பட்டு சோதனை அறிக்கைகள் வழங்கி மேல் நடவடிக்கைக்காக வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தப்பட்டது.

இது குறித்து மோட்டார் வாகன ஆய்வாளர் விமலா தெரிவிக்கையில்; குழந்தைகளை ஏற்றி செல்லும் ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்களையும் நாங்களே கண்காணிக்க வேண்டி உள்ளது. 

இந்த வாகனங்களை குறித்து எந்த பள்ளி நிர்வாகமும் கவலைப்படுவதில்லை. அதே போல பெற்றோர்களும் கவலைப்படுவதில்லை. வாகனத்தின் தரம் குறித்த விஷயத்தில் பெற்றோர்கள், பள்ளி நிர்வாகம் இருவருக்கும் பொறுப்பு இருக்கிறது. 

வாகனங்களின் தகுதி சான்று பற்றிய அனைத்து விபரங்களும் அந்த வாகனத்தின் இடது புறத்தில் அச்சிடப்பட்டிருக்கும். அந்த வாகனத்தின் தரம் குறித்து பெற்றோர்கள் அதனைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு மோட்டார் வாகன ஆய்வாளர் விமலா கூறினார். 

மேலும் தகுதி சான்று இல்லாமல் எந்த வாகனமும் பள்ளிக் குழந்தைகளை ஏற்றி செல்லக்கூடாது. அவ்வாறு செய்தல் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு முறையான நடவடிக்கை எடுத்து வாகனம் சிறைபிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chidambaram area impounded motor vehicle action


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->