வெயிலால் தவித்து வந்த தமிழக மக்களுக்கு வயிற்றில் பாலை வார்த்த சென்னை வானிலை ஆய்வு மையம்.! வெளியான அதிரடி அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழையானது துவங்கியுள்ளது. இதனையடுத்து கேரளாவை ஒட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியின் தமிழக மாவட்டத்திலும் நல்ல மழையானது பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மழை பெய்து வந்தாலும்., பிற உள் மாவட்டங்களை வெயில் வாட்டி வதைத்து கொண்டு வருகிறது. 

உள்மாவட்டத்தில் இருக்கும் மக்கள் அனைவரும் மழையை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில்., தமிழகத்தின் தலைநகரான சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடுமையான தண்ணீர் பஞ்சமானது ஏற்பட்டு., நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து பெரும் இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனர். வரும் காலத்தில் பெய்யும் மழையை எதிர்பார்த்தே மக்கள் காத்துகொண்டு இருக்கின்றனர். 

இந்த சமயத்தில்., சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்த தகவலானது., சென்னை வாசிகளிடையே வயிற்றில் பாலை வார்த்தது போல் உள்ளது. 

தமிழகத்தை பொறுத்த வரையில் வரும் 15 ஆம் தேதிக்கு பின்னர் வெயிலின் தாக்க்கமானது வெகுவாக குறைய துவங்கும். தென்மேற்கு பருவமழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள கன்னியாகுமரி., திருநெல்வேலி., தேனி., கோயம்புத்தூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள பகுதிகளில் மிதமான மற்றும் நல்ல மழையானது பெய்து வருகிறது., இனியும் இந்த மழை துவங்கும். 

இன்றைய தினத்தை பொறுத்த வரையில் திருவள்ளூர்., காஞ்சிபுரம்., சென்னை., வேலூர்., திருவண்ணாமலை., விழுப்புரம்., கடலூர்., அரியலூர் மற்றும் பெரம்பலூர் பகுதியில் அனல் காற்றானது வீசும் என்றும்., தலைநகர் சென்னையை பொறுத்த வரையில் வெப்பசலத்தின் காரணமாக இன்று மற்றும் நாளை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் கூறியுள்ளனர். 

இதுமட்டுமல்லாது இன்றுடன் சுமார் 24 மணிநேரம் முடிவடைந்துள்ள நிலையில் வால்பாறை மற்றும் குளச்சலில் சுமார் 2 செ.மீ மழையும்., பேச்சிப்பாறை., குழித்துறை., பெரியாறு மற்றும் செங்கோட்டையில் 1 செ.மீ மழையும் பெய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai weather report announce to rain for Chennai and tamilnadu district


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->