9 மாவட்டங்களுக்கு இறுதி எச்சரிக்கை.! அனல் காற்று மற்றும் சுட்டெரிக்கும் வெயில்.!! சென்னை வானிலை மையம்.!!  - Seithipunal
Seithipunal


இந்த வருடத்திற்கான தென்மேற்கு பருவமழையானது மே மாதத்தின் இறுதியில் துவங்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்த வேளையில்., பருவமழை தாமதமாக துவங்கியது. கடந்த 8 ஆம் தேதியன்று கேரளாவில் துவங்கிய இந்த பருவமழையை அடுத்து., அரபிக்கடல் பகுதியில் புயல் ஒன்று உருவாகிக்கொண்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

தென்மேற்கு பருவமழைக்கான காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி., வடமேற்கு திசையில் பயணித்து இன்னும் 24 மணி நேரத்தில் புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும்., வரும் மூன்று நாட்களுக்கு அரபிக்கடல் பகுதியை சார்ந்த மீனவர்கள் மீன் பிடிப்பதற்கு கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் விடப்பட்டுள்ளது. 

வலுப்பெறும் இந்த புயல் வடக்கு மற்றும் வடமேற்கு திசையை நோக்கி பயணித்து குஜராத்திற்கு செல்ல உள்ளதால்., கடல் பகுதிகளில் மட்டும் மழை பெய்யலாம் என்றும்., தமிழகத்தை பொறுத்த வரையில் வெப்பசலனத்தின் காரணமாக வரும் இரண்டு நாட்களுக்கு மழை இருக்கும் என்றும்., தமிழகத்தின் மேற்கு மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

வெயிலை பொறுத்த வரையில் சுமார் 9 மாவட்டங்களில் அனல் கற்று வீசும் என்றும்., அவ்வாறு அனல் காற்று வீசக்கூடிய இடங்களான திருவள்ளூர்., வேலூர்., சென்னை., கரூர்., காஞ்சிபுரம்., விழுப்புரம்., திருவண்ணாமலை., கடலூர்., பெரம்பலூர் மற்றும் திருச்சி மாவட்டங்களிலும்., புதுச்சேரி மாநிலம் முழுவதும் அனல் காற்று வீசும் என்பதால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai weather report announce to rain and heat wave


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->