அண்ணன் கண் முன்னரே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்த தம்பி.. வாகன விபத்தால் அரங்கேறிய சோகம்.! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள திருவேற்காடு நூம்பல் பகுதியை சார்ந்தவர் முகமது யூனுஸ். இவர் சொந்தமாக தொழில் செய்து வரும் நிலையில், இவருக்கு முகமது ஆசிக் என்ற 24 வயது மகனும், முகமது வாசிம் என்ற 20 வயது மகனும் உள்ளனர். 

இவர்களில் முகமது வாசிம் மதுரவாயல் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் மூன்றாம் பயின்று வந்துள்ளார். அண்ணன் - தம்பி இருவரும் நேற்று அங்குள்ள அசோக் நகரில் இருக்கும் உறவினரின் இல்லத்திற்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளனர். 

காரினை முகமது வாசிம் இயக்கிய நிலையில், அருகே அவரது அண்ணன் முகமது ஆசிக் இருந்துள்ளார். இவர்களின் கார் வடபழனி நூறடி சாலையில் வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இருந்த ஆட்டோ மற்றும் லாரியின் மீது மோதியுள்ளது. 

பின்னர் அங்கேயே தலைகுப்பற கவிழ்ந்து விபத்திற்கு உள்ளாகியது. இந்த விபத்தில் முகமது வாசிம் படுகாயமடைந்து உயிருக்கு போராடி அலறித்துடிக்கவே, தனது அண்ணன் கண் எதிரிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ஆசிப் லேசான காயத்துடன் உயிர் தப்பியுள்ளார்.

இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த பாண்டிபஜார் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, முகமது வாசமின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Thiruverkadu Accident Youngster Suicide in front of his Brother


கருத்துக் கணிப்பு

2021-ல் தமிழகத்தில் முழு மதுவிலக்குAdvertisement

கருத்துக் கணிப்பு

2021-ல் தமிழகத்தில் முழு மதுவிலக்கு
Seithipunal