ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டண குறைவால் பயணிகள் மகிழ்ச்சி.! - Seithipunal
Seithipunal


ரெயில் நிலையங்களில் பண்டிகை காலத்தை முன்னிட்டு, கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், சென்னை ரெயில்வே கோட்டம் கடந்த செப்டம்பர் மாதம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 

அதில், தமிழகத்தில் சென்னை சென்டிரல், எழும்பூர் உள்பட எட்டு ரெயில் நிலையங்களில் நடைமேடை பயணசீட்டு கட்டணம் ரூ.10-ல் இருந்து ரூ.20 ஆக உயர்த்தப்பட்டிருந்தது. மேலும் இது, அக்டோபர் மாதம் 1-ம் தேதி முதல் ஜனவரி மாதம் 31-ந் தேதி வரை அமலில் இருக்கும் என்று தெரிவித்திருந்தது.

தற்போது, பண்டிகை காலம் முடிவடைந்த நிலையில் அந்த 8 ரெயில் நிலையங்களில் நடைமேடை பயணசீட்டு கட்டணம் ரூ.20-ல் இருந்து ரூ.10 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை சென்டிரல், எழும்பூர், தாம்பரம் உள்ளிட்ட எட்டு ரெயில் நிலையங்களில் நடைமேடை பயணசீட்டு கட்டணம் ரூ.20-ல் இருந்து ரூ.10 ஆக குறைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், நேற்று முதல் இந்த நடைமேடை பயணசீட்டு கட்டணம் குறைப்பு அமலுக்கு வந்துள்ளதாக சென்னை ரெயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நடைமேடை கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதால், பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai railway station platform ticket decrease


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->