#BREAKING || லியோ பட வெற்றி விழாவுக்கு காவல்துறை அனுமதி!! - Seithipunal
Seithipunal


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய்யின் லியோ திரைப்படம் கடந்த அக்டோபர் 19ஆம் தேதி உலகம் முழுவதும் 5 மொழிகளில் வெளியானது. லியோ திரைப்படம் ஒரே வாரத்தில் ரூ.461 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில் லியோ மாறுபட்ட விமர்சனங்களை எதிர் கொண்டுள்ளது.

இந்த நிலையில் சென்னையில் உள்ள நேரு அரங்கில் லியோ படத்தின் வெற்றி விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு காவல்துறையினரின் அனுமதிக்கு பட குழுவினர் விண்ணப்பித்திருந்தனர். அதன் மீது பரிசீலனை செய்த சென்னை காவல்துறை விழாவுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி சென்னையில் உள்ள நேரு விளையாட்டு அரங்கில் நாளை மறுநாள் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் விளையாட்டு அரங்கில் எவ்வளவு இருக்கைகள் உள்ளதோ அதுவரை தான் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என்பதால் பேருந்துகளுக்கு அனுமதி இல்லை. நேரு விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு 200 முதல் 300 கார்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என காவல்துறை நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Police permission granted for Leo movie success function


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->