சென்னையில் பா.ஜ.க பேரணிக்கு அனுமதி மறுப்பு: காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி. நட்டா பங்கேற்கும் 'என் மண் என் மக்கள்' யாத்திரைக்கு சென்னை காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. 

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை நடத்தும் 'என் மண் என் மக்கள்' என்ற யாத்திரையை ராமேஸ்வரத்தில், கடந்த ஜூலை மாதம் 28ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். 

இந்த பேரணி வருகின்ற 11ஆம் தேதி சென்னையில் நிறைவு பெற உள்ளதால் அந்த நிகழ்ச்சியில் பாlஜlக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் யாத்திரையின் சென்னை பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். 

மேலும் வட மாநிலங்களில் பா.ஜ.க நடத்தும் பேரணியால் கலவரம் ஏற்பட்டதை கருத்தில் கொண்டு பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதே சமயத்தில் சென்னை சென்ட்ரல் அருகே மின்ட் தங்க சாலையில் பா.ஜ.க பொதுக்கூட்டம் நடத்த மட்டுமே காவல்துறை அனுமதித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Police denied permission BJP rally


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->