செல்போனிலேயே போட்டோ எடிட்டிங்.. நீட் தேர்வு மதிப்பெண் சான்றிதழ் மோசடி விவகாரத்தில் பகீர்.! - Seithipunal
Seithipunal


சென்னையில் நடைபெற்ற மருத்துவ கலந்தாய்வில் கலந்துகொண்ட மாணவி தீக்ஷா (வயது 18), போலியான நீட் மதிப்பெண் சான்றிதழை வைத்து சேர்ந்துள்ளார். மேலும், அவர் நீட் தேர்வில் 27 மதிப்பெண்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில், 610 மதிப்பெண்கள் பெற்றதாக சான்றிதழ் தயாரித்து கொடுத்துள்ளார். 

கலந்தாய்வில் மாணவி தீக்ஷா, அவரது தந்தையான பல் மருத்துவர் பாலச்சந்திரனுடன் கலந்து கொண்டார். இந்நிலையில், கணினி மையம் மூலமாக மாணவி 610 மதிப்பெண் எடுத்ததாக போலி சான்றிதழ் தயாரித்தது உறுதியான நிலையில், இது தொடர்பான விசாரணை நடைபெற்று வந்தது.

சென்னை பெரியமேடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்த நிலையில், மாணவியின் தந்தை மருத்துவர் பாலச்சந்திரன் கைது செய்யப்பட்டார். விசாரணைக்கு பின்னர் சிறையில் பாலச்சந்திரன் அடைக்கப்பட்ட நிலையில், மாணவியின் மடிக்கணினி மட்டும் அலைபேசி கைப்பற்றப்பட்டுள்ளது.

தலைமறைவான மாணவியை காவல் துறையினர் தேடி வந்த நிலையில், நேற்று சென்னையில் உள்ள விடுதியில் தங்கியிருந்த மாணவியை காவல் துறையினர் கைது செய்தனர். இவரிடம் மேற்கொண்ட விசாரணையில் போலியான நீட் மதிப்பெண் சான்றிதழை அலைபேசியில் உள்ள எடிட்டிங் சாப்டவெர் மூலமாகவே தயார் செய்ததாகவும் தெரிவித்துள்ளதாக காவல் துறையினர் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Neet Result Fake Certificate Issue Police Arrest girl Student


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->