டிட்வா புயல் தொடரும் சூறாவளியில் சென்னை நகராட்சி 215 நிவாரண மையங்கள் திறந்து நடவடிக்கை...!
Chennai Municipality opens 215 relief centers Cyclone ditwah continues rage
பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின் படி, வடகிழக்கு பருவமழையின் தாக்கம் மிகுந்த நிலையில் நகராட்சி முழுவதும் அவசரப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 17.10.2025 முதல் 3.12.2025 காலை 8.30 மணி வரை, சராசரியாக 546.05 மிமீ மழை பெய்து, குறிப்பாக எண்ணூர் (திருவொற்றியூர் மண்டலம்) பகுதியில் 135.30 மிமீ அதிகபட்ச மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.

குறைந்தபட்சம் முகலிவாக்கம் (ஆலந்தூர் மண்டலம்) பகுதியில் 20 மிமீ மழை பதிவானது.இந்நிலையில் இன்று (3.12.2025) காலை 6 மணி முதல் 12 மணி வரை சராசரியாக 15.18 மிமீ மழை பெய்து, அதிகபட்சம் எண்ணூரில் 108.60 மிமீ, குறைந்தபட்சம் ஐஸ் ஹவுஸ் பகுதியில் 1.80 மிமீ பதிவாகியுள்ளது.
நகராட்சி 215 நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளன. இவை உணவு, குடிநீர் மற்றும் சுகாதார வசதியுடன் பொதுமக்களுக்கு பாதுகாப்பான தங்குமிடம் வழங்குகின்றன. 111 சமையல் கூடங்கள் உணவு வழங்கும் பணியில் செயல்பட்டு, 22.10.2025 முதல் 30.10.2025 வரை 5,98,200 நபர்களுக்கு, 30.11.2025 முதல் 2.12.2025 வரை 11,24,350 நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
இன்று (3.12.2025) காலை 2,74,600 நபர்களுக்கு காலை உணவு, 3,51,300 நபர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது.மழைக்கால மருத்துவ சேவைகள் 2,954 நிலையான மற்றும் நடமாடும் சிறப்பு மருத்துவ முகாம்களில் வழங்கப்பட்டு, 1,20,998 நபர்கள் பயனடைந்துள்ளனர்.
இன்று (3.12.2025) 103 இடங்களில் மருத்துவ முகாம்கள் தொடர்கிறன.தாழ்வான பகுதிகளில் பொதுமக்களை பாதுகாப்பாக நிவாரண மையங்களில் தங்கவைத்தல் மற்றும் மீட்பு பணிகளுக்காக 107 படகுகள், NDRF சார்பில் 300 பேரும், SDRF சார்பில் 50 பேரும் தயார் நிலையில் உள்ளனர்.மழைநீர் வடிகால்கள் மற்றும் போக்குவரத்து தடைகளை குறைப்பதற்காக, 1,496 மோட்டார் பம்புகள், 478 வாகனங்கள் மற்றும் இயந்திரங்கள், 457 மர அறுவை இயந்திரங்கள் ஆகியவை செயல்படுகின்றன.
29.11.2025 முதல் 3.12.2025 வரை விழுந்த 64 மரங்கள் அகற்றப்பட்டு, நகரின் 22 சுரங்கப்பாதைகள் போக்குவரத்துக்கு திறந்திருக்கும் நிலையில் உள்ளன.24 மணி நேர ஒருங்கிணைந்த கட்டளை மையம் மூலம் 1913 உதவி எண்ணிற்கு வரும் புகார்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வரும் குறைகளை உடனடி நடவடிக்கையுடன் சமாளிக்கிறது.
இதற்காக, அலுவலர்கள், பொறியாளர்கள், தூய்மை பணியாளர்கள் உட்பட 22,000 நபர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.மழை மற்றும் புயல் தாக்கத்தில் முதியோர் மற்றும் குழந்தைகளுக்கான ஆதரவாக ஆவின் பால் பவுடர் 1 லட்சம் பாக்கெட்டுகள், 5 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு, 1 லிட்டர் பாமாயில் அடங்கிய 1 லட்சம் தொகுப்புகள் தயார் நிலையில் உள்ளன.
English Summary
Chennai Municipality opens 215 relief centers Cyclone ditwah continues rage