சென்னையில் வரலாறு காணாத அளவுக்கு ஏற்பட போகும் அபாயம்!! வெளியான தகவலால் பீதியில் மக்கள்!! - Seithipunal
Seithipunal


இந்த வருடம் போதிய மழை இல்லாதால் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கோடை காலத்தில் வெயில் வாட்டி வரும் நிலையில், சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் ஏரிகளான புழல், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம், ஆகிய நான்கு ஏரிகள் தான். இவற்றில் சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகள் ஏற்கனவே வறண்டு விட்டது.

இந்த நிலையில், சென்னை குடிநீர் தேவைக்காக புழல் ஏரியில் இருந்து 6 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் உறிஞ்சப்பட்டு சுத்திகரிப்பு நிலையத்தில் அனுப்பப்பட்டு வந்தன இந்த குடிநீரை தான் மக்கள் பயன்படுத்தி வந்தனர். தற்போது புழல் ஏரியில் 2 மில்லியன் கன அடி அளவுக்கு மட்டுமே நீர் இருப்பு உள்ளதால் மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சும் பணி முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.

சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வந்த  புழல், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய நான்கு ஏரிகளும் வறண்டு விட்டதால் சென்னை வரலாறு காணாத குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. இதனால் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் முன்பே அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai lake are close


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->