திருமணம் செய்யச்சொல்லி காதலி வற்புறுத்தியதால் விரக்தி.. தூக்கில் தொங்கிய காதலன்.! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள குன்றத்தூர் சிவன் கோவில் தெருவை சார்ந்தவர் சதீஸ்குமார் (வயது 30). இவர் கடைகளுக்கு சிகிரெட் விற்பனை செய்யும் தொழில் செய்து வந்த நிலையில், கடந்த ஒரு வருடத்திற்கு முன்னதாக 23 வயது பெண்மணியை காதலித்து வந்துள்ளார். 

இதன்பின்னர், அந்த பெண்மணியை பிடிக்காமல் போகவே, அவரை விட்டு விலகி சென்றதாக தெரியவருகிறது. இந்நிலையில், சதீஷ்குமாரிடம் அந்த பெண்மணி நீ தான் என்னை திருமணம் செய்ய வேண்டும் என்று தொந்தரவு செய்து வந்துள்ளார்.

இதனால் மிகுந்த மனவருத்தத்தில் இருந்து வந்த சதீஷ், நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த குன்றத்தூர் காவல் துறையினர், சதீஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Kundrathur youngster Suicide due to Lover Torture Marriage


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal