காங்கிரஸ் உள்கட்சி பூசல் வெளிச்சம்! வேட்பாளரை அறிவிக்காத காங்கிரஸ்! கோவத்தில் ராகுல்! குழப்பத்தில் நிர்வாகிகள்!
Congress internal conflict exposed Congress has not announced a candidate Rahul in anger Executives in confusion
தமிழக சட்டசபைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் செயல்பாடு அரசியல் வட்டாரங்களில் கேள்விகளை எழுப்பியுள்ளது. கடந்த மாதம் வரை கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீட்டை விரைவாக முடிக்க திமுக மீது அழுத்தம் கொடுத்த காங்கிரஸ், தற்போது வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் கடும் தாமதம் செய்து வருகிறது.
திமுக கூட்டணியில் 28 தொகுதிகளை பெற்றுள்ள காங்கிரஸ், மனுத்தாக்கல் தொடங்கிய பின்னரும் வேட்பாளர் பட்டியலை அறிவிக்க முடியாத நிலையில் உள்ளது. இதற்குக் காரணமாக கட்சியின் உள்கட்சி முரண்பாடுகள் மற்றும் டெல்லி மேலிட ஒப்புதல் நடைமுறைகள் கூறப்படுகின்றன.
குறிப்பாக வேட்பாளர் தேர்வில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் வெளிப்படையாகி உள்ளன. பென்னாகரம் தொகுதியில் புதியவரான தமிழ்க்குமரனை வேட்பாளராக நிறுத்தும் முயற்சியை எம்.பி. கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் கடுமையாக எதிர்த்தது, கட்சிக்குள் நிலவும் குழப்பத்தை வெளிப்படுத்தியுள்ளது. “கட்சியுடன் தொடர்பே இல்லாதவர்களுக்கு சீட் வழங்குவது ஏன்?” என்ற கேள்வி மூத்த நிர்வாகிகள் மத்தியில் எழுந்துள்ளது.
பொதுவாகவே காங்கிரசில் வேட்பாளர் தேர்வு தாமதமாகும் என்பது வழக்கமாக இருந்தாலும், இந்த முறை தேர்தல் நெருங்கியுள்ள சூழலில் கூட பட்டியல் வெளியாகாதது அதிருப்தியை அதிகரித்துள்ளது. கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் ஏற்கனவே பிரசாரத்தில் இறங்கிய நிலையில், காங்கிரஸ் மட்டும் இன்னும் ‘ஸ்கிரீனிங்’, ‘மேலிடம் ஒப்புதல்’ என தாமதித்து வருவது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
கூட்டணியை விரைவாக உறுதி செய்ய காட்டிய வேகம், வேட்பாளர்களை அறிவிப்பதில் காணாமல் போனதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இந்த உள்கட்சி குழப்பம், திமுக கூட்டணிக்கும் சிக்கலை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளதாகவும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.
மொத்தத்தில், “சீட் வாங்கும் வேகம் – வேட்பாளர் அறிவிக்கும் தாமதம்” என்ற முரண்பாடு காங்கிரஸ் கட்சியின் தற்போதைய அரசியல் நிலையை வெளிப்படுத்துவதாகவே பார்க்கப்படுகிறது. தேர்தல் நெருங்கும் நிலையில் இந்த குழப்பம் விரைவில் தீருமா என்பதே முக்கிய கேள்வியாக உள்ளது.
English Summary
Congress internal conflict exposed Congress has not announced a candidate Rahul in anger Executives in confusion