சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு.. ஐடி நிறுவனங்கள் போட்ட அதிரடி உத்தரவு.! அதிர்ச்சியில் ஆடி போன ஊழியர்கள்.! - Seithipunal
Seithipunal


இந்த வருடம் போதிய மழை இல்லாதால் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கோடை காலத்தில் வெயில் வாட்டி வரும் நிலையில், சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் ஏரிகளான புழல், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம், ஆகிய நான்கு ஏரிகள் தான். இவற்றில் சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகள் ஏற்கனவே வறண்டு விட்டது.

தற்போது வீடுகளை அடுத்து அலுவலர்களுக்கும் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் வேலைக்கு வரும் ஊழியர்கள் தண்ணீர் பாட்டிலில் தண்ணீரை எடுத்து வருமாறு நிர்வாகம் மறுத்து வருகிறது. 

சென்னை ஓஎம்ஆர் பகுதியில் சுமார் 600 ஐடி நிறுவனங்கள் அமைந்துள்ளது. ஒரு நாளைக்கு மட்டும் 3 கோடி லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. இதனால் பெரும்பாலான பெரும்பாலான தண்ணீர் வெளியிலிருந்துதான் கொண்டுவரப்படுகிறது.

குறிப்பாக சிப்காட் பகுதியில் உள்ள 46 ஐடி நிறுவனங்களுக்கு 20 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. அதற்கு உள்ள 17 கிணறுகளிலிருந்து தண்ணீர் எடுக்கப்படுகிறது. அதனால் தற்போது அங்கு 10 லட்சம் லிட்டர் தண்ணீர் மட்டும் தினமும் தரப்படுகிறது. 

இந்நிலையில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதால் தண்ணீர் தேவையை சமாளிக்க முடியாத பல நிறுவனங்கள் அவதிக்கு உள்ளாகி வருகிறது. மேலும் தங்களது தேவையான குடிநீர் வீட்டிலிருந்து எடுத்து வருமாறும், அலுவலங்கள் தண்ணீர் குறைவாக பயன்படுத்துமாறும் ஊழியர்களுக்கு நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் ஒரு சில நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணி செய்யுமாறும் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai it company for water problem


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->