தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தை காலி செய்ய வேண்டும் - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!!
chennai high court order thambaram police commissioner office vacate within 2 years
தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தை காலி செய்து கட்டிடத்தை ஒப்படைக்கக் கோரி, கட்டிடத்தின் உரிமையாளர்களர்கள் சரத்குமார், வெங்கடேஷ், சவுத்திரி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அதில், மாதம் 10 லட்சத்து 14 ஆயிரத்து 300 ரூபாய் என்று வாடகை நிர்ணயித்து, கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி முதல் 11 மாதங்களுக்கு குத்தகை ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. அதன் படி வாடகை வழங்காமல், பொதுப்பணித் துறை வழிகாட்டி மதிப்பீட்டின் அடிப்படையில், மாதம் 6 லட்சத்து 8 ஆயிரத்து 438 ரூபாய் வாடகையாக நிர்ணயித்து, 2022-ம் ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரைக்கும் 82 லட்சத்து 16 ஆயிரத்து 824 ரூபாய்க்கு காசோலை வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், ஒப்பந்தத்துக்கு மாறாக வாடகை நிர்ணயித்ததால் மாதத்துக்கு 4 லட்சம் ரூபாய் இழப்பை சந்தித்து வருகிறோம். குத்தகை காலத்தை நீட்டிக்க மறுத்த நிலையில், எந்த ஒப்பந்தமும் இல்லாமல் கட்டிடத்தை பயன்படுத்தி வருவது சட்டவிரோதம் என்பதால், அதனை காலி செய்து ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்து இருந்தனர்.
இந்த நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது கட்டிடத்துக்கான வாடகையை 6 லட்சம் ரூபாயில் இருந்து 13 லட்சம் ரூபாயாக உயர்த்துகிறேன். இந்த வாடகை கூடுதல் தொகையான 2.18 கோடி ரூபாயை வருகிற டிசம்பர் 31-ந்தேதிக்குள் மனுதாரர்களுக்கு அரசு வழங்க வேண்டும். இரண்டு ஆண்டுகளில் கட்டிடத்தில் இருந்து காவல் ஆணையர் அலுவலகத்தை காலி செய்யவேண்டும்" என்று உத்தரவிடப்பட்டது.
English Summary
chennai high court order thambaram police commissioner office vacate within 2 years