அமலாக்கத்துறைக்கு அபராதம் விதித்த உயர்நீதிமன்றம் - நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


சமீபத்தில் தமிழக டாஸ்மாக்கில் நடைபெற்ற ஆயிரம் கோடி ரூபாய் முறைகேட்டில் திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் உள்ளிட்டோருக்கு தொடர்பு இருப்பதாக கூறி அவரது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

அந்த சோதனையின் போது தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் வீடு மற்றும் அலுவலகத்துக்கு 'சீல்' வைத்தனர். அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கையை எதிர்த்து இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு சென்னை கடந்த ஜுன் 20 ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது வழக்கை விசாரித்த நீதிபதிகள், டாஸ்மாக் வழக்கில் திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரன் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்த அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை.

சோதனை தொடர்பாக நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த ஆவணங்களில் எந்த ஆதாரமும் இல்லை. இப்படி இருக்கும் பட்சத்தில் சோதனை நடத்துவதற்கு அமலாக்கத்துறைக்கு எந்தவொரு அதிகாரமும் இல்லை. அவர்களிடம் இருந்து கைப்பற்றிய ஆவணங்கள், லேப்டாப், செல்போன்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும்.

ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரன் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் தாக்கல் செய்த வழக்கில் பதில் மனுத் தாக்கல் செய்யாத அமலாக்கத் துறைக்கு ரூ.30,000 அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

ஏற்கனவே இரண்டு முறை அவகாசம் வழங்கிய பின்னரும் பதில் மனுத் தாக்கல் செய்யாதது சரியான நடவடிக்கை அல்ல என்று அமலாக்கத் துறைக்கு நீதிபதிகள் கண்டனமும் தெரிவித்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

chennai high court fine to enforcement department for producer akash baskar case


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->