28 ஆயிரம் விவசாயிகளுக்கு 127 கோடி ருபாய் இழப்பீடு.! சற்றுமுன் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!  - Seithipunal
Seithipunal


சாயப்பட்டறை விவகாரத்தில் விவசாயிகளுக்கு 127 கோடி ரூபாய் இழைப்பீடு வழங்க வேண்டும் என்று, சென்னை உயர்நீதிமன்றம் சற்றுமுன்பு உத்தரவு பிறப்பித்துள்ளது.

சாயப்பட்டறை கழிவுகளால் நொய்யல் நதி மாசடைந்து திருப்பூர், கரூர், ஈரோடு, கோவை மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்கள் பாதிப்பு அடைந்தது. இதுகுறித்தான மனுவை பரிசீலனை செய்த உயர்நீதிமன்றம், தகுதியான நபர்களுக்கு மே மாதம் 31ஆம் தேதிக்குள் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் செயல்படக்கூடிய பின்னலடை மற்றும் சாயப் பட்டறைகள் கழிவுகள் நொய்யல் நதியில் கலந்து, நதி மாசடைந்து விட்டது. இதனால் விவசாயம் செய்ய முடியாமல் விவசாய நிலங்கள் பாழடைந்து போய் விட்டன.

இதுகுறித்து கரூர் மாவட்ட விவசாயிகள் சங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரணை செய்த உயர்நீதிமன்றம், "சாயப்பட்டறை கழிவுகளால் பாதிக்கப்பட்ட 28 ஆயிரம் விவசாயிகளுக்கு சுமார் 127 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்" என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CHENNAI HC order for formers


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal