தமிழகத்தின் இன்னும் இரண்டே வாரத்தில் மெட்ராஸ் ஐ குறையும் - அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக 'மெட்ராஸ் ஐ' எனும் கண் நோய் வேகமாக பரவி வருகிறது. இந்த நோய், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என பலருக்கும் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக கண் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது, கண்ணில் அடினோ வைரஸ் என்ற கிருமியினால் கன்சங்டிவா என்ற விழி வெண் படலத்தில் ஏற்படும் ஒருவித நோயாகும். 

இந்நிலையில், 'மெட்ராஸ் ஐ' பரவல் குறித்து சென்னை, எழும்பூரில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:-

"தமிழகத்தில் செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் இருந்து 'மெட்ராஸ் ஐ' கூடுதலாக பரவி வருகிறது. இந்த நோயின் அறிகுறியாக கண்ணில் உருத்தல், சிவந்த நிறம், அதிக கண்ணீர், வீக்கம் உள்ளிட்டவை காணப்படுகிறது.

ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு 'மெட்ராஸ் ஐ' பாதிப்பு ஏற்பட்டால் நான்கு நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அவர்கள் தாமாக சென்று மருந்தகங்களில் கண் மருந்து வாங்காமால், மருத்துவர் அறிவுறுத்தல்படி மருந்து வாங்கி பயன்படுத்த வேண்டும்.

தற்போது, தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 4,500 பேர் வரை மெட்ராஸ் ஐ நோயால் பாதிக்கப்படுகின்றனர். 'மெட்ராஸ் ஐ' டிசம்பர் மாதம் 2-வது வாரத்திற்கு பின்பு இருக்காது. 

இந்த நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் இதுவரை 1.50 பேருக்கு மெட்ராஸ் ஐ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நோய் விரைவில் பரவும் தன்மைக்கு கொண்டதால், மக்கள் தாமாக சிகிச்சை எடுக்கக் கூடாது" என்று அவர் தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai ezhumbur minister m.subramaniyan press meet for madras eye


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->