#Breaking: " ஆன்லைன் மூலமாக அரியர் தேர்வுகளை நடத்தலாமே ".. தமிழக அரசுக்கு கேள்வி.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வந்ததன் காரணமாக, கல்லூரிகளில் அரியர் வைத்து பணம் கட்டிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. தமிழக அரசின் அரியர் ஆள் பாஸ் விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. 

இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், ஒவ்வொரு விசாரணையில் அரியர் தேர்வுகள் ரத்து செல்லாது என்று அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், அரியர் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கைக்கு எதிராக யூ.ஜி.சி பதில் மனுதாக்கல் செய்து வருகிறது. 

இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை மீண்டும் இன்று நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள், " இறுதிபருவ தேர்வுகளை இணையத்தளம் வாயிலாக நடத்தும் பட்சத்தில், அரியர் தேர்வுகளையும் ஏன் இணையத்தளம் வாயிலாக நடத்த கூடாது " என்று கேள்வியை எழுப்பினர். 

மேலும், யூ.ஜி.சி செய்த பதில் மனுத்தாக்களில் " தமிழக அரசின் அரியர் தேர்வு ரத்து விவகாரத்தில் உடன்பாடு இல்லை " என்று தெரிவித்துள்ளது. இந்த விசாரணையில், தமிழக அரசின் பல்கலைக்கழக மானியக்குழு பதில் அளிக்க கால அவகாசம் கேட்ட நிலையில், இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், விசாரணையை 20 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Court Raise Question about Arrear Exam Online 29 October 2020


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->