நிவர் புயல் அதிதீவிரமாக நெருங்கும் எதிரொலி.. சென்னை மாநகராட்சி மக்களுக்கு அறிவுறுத்தல்.! - Seithipunal
Seithipunal


நிவர் புயல் புதுச்சேரியில் இருந்து 190 கிமீ தொலைவிலும், சென்னையில் இருந்து 250 கிமீ தொலைவிலும், கடலூரில் இருந்து 180 கிமீ தொலைவிலும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும் போது சென்னையில் 90 கிமீ வேகத்தில் காற்று வீசலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் கனமழையும் பெய்து வருகிறது.

இந்நிலையில், சென்னையில் உள்ள பொதுமக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. தாழ்வான பகுதியில் இருக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இறக்க வேண்டும் என்றும், மாநகராட்சியின் நிவாரண முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வீட்டில் உள்ள மாடியில் தேவையில்லாத பொருட்கள் இருந்தால் அப்புறப்படுத்தி வைக்க வேண்டும் என்றும், பொது இடங்கள் மற்றும் பிற இடங்களில் உள்ள பேனர்களை அகற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சி சார்பாக அமைக்கப்பட்டுள்ள முகாம்களை பயன்படுத்தி கொள்ளுமாறும், நிவாரண முகாம்களில் தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளதாக சென்னை மாநகர ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Corporation warning to Chennai Peoples about Flood and Heavy Rain Storm


கருத்துக் கணிப்பு

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி?!Advertisement

கருத்துக் கணிப்பு

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி?!
Seithipunal