மதுரையை பீட் செய்த சென்னை. மீண்டும் பெற்ற உச்சம்.! Top 3 மாவட்டங்கள்.! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது. இதனால், நேற்று டாஸ்மாக் கடைகளில் கூட்டம் குவிந்ததால் ரூ.243 கோடி வசூல் ஆகி இருக்கின்றது. 

இரண்டு மாத காலமாக ஞாயிற்றுக்கிழமையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டு இருக்கின்றன. இதனால் மது பிரியர்கள் இரண்டு நாட்களுக்கு தேவையான மதுவை சனிக்கிழமை வாங்கி வைத்து வருவதால் ஓவொரு வாரமும் சனிக்கிழமை டாஸ்மாக் வருமானம் அதிகரித்து வருகின்றது. 

இந்நிலையில், தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மது விற்பனை நேற்று ரூ.243 கோடியாக இருக்கின்றது. கடந்த வாரம் சென்னையில் டாஸ்மாக் திறக்கப்படாததால், மதுரை மண்டலம் அதிகமான மது விற்பனை வசூலைக் கண்டு வந்தது. இந்த முறை சென்னை மண்டலத்தில் ரூபாய் 52 கோடிக்கு விற்பனையாகி முதல் இடம் இருக்கின்றது. 

மதுரை மண்டலத்தில் 49 கோடிக்கும், திருச்சியில் 48 கோடிக்கும், சேலத்தில் 47 கோடிக்கும், கோவையில் நாற்பத்தி ஐந்து கோடிக்கு மது விற்பனை ஆகி இருக்கின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai beet madurai on tasmac collection


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->