பூட்டை உடைப்பதில் தகராறு.. பரிதாபமாக உயிரிழந்த கல்லூரி மாணவர்... சென்னையில் பயங்கரம்.! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள அரும்பாக்கம் திருவேங்கட கிருஷ்ணா நகர் பகுதியை சார்ந்தவர் குப்புசாமி. இவரது மகன் ஸ்ரீராம் (வயது 19). ஸ்ரீராம் சென்னையில் உள்ள கல்லூரியில் பி.காம் இரண்டாம் வருடம் பயின்று வந்துள்ளார். குப்புசாமியின் இல்லத்தில் ராஜா என்ற நபர், கடந்த சில வருடமாக குடும்பத்துடன் லீசுக்கு தங்கியிருந்துள்ளார். 

இந்த நிலையில், நேற்று மத்திய நேரத்தின் போது இரண்டாவது மாடியில் இருக்கும் வீடொன்று காலியாகவே, ராஜாவின் மகன் சாகர் (வயது 28), அந்த வீட்டினை பூட்டி வைத்துள்ளார். இந்த பூட்டினை ஸ்ரீராம் உடைக்க முயற்சி செய்துள்ளார். 

இதனால் ராஜாவின் குடும்பத்திற்கும் - குப்புசாமியின் குடும்பத்திற்கும் இடையே தகராறு ஏற்படவே, ஆத்திரத்தில் ஸ்ரீராமை தள்ளி விட்டுள்ளனர். இதனால் இரண்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்த ஸ்ரீராம், தலையில் பலத்த காயமடைந்து இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியுள்ளார். 

இவரை மீட்ட பெற்றோர்கள் கீழ்ப்பாக்கத்தில் இருக்கும் அரசு மருத்துவமனையில் அனுமதி செய்தும், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியாகியுள்ளார். இந்த விஷயம் குறித்து அரும்பாக்கம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், ராஜா வீட்டிற்கு ரூ.5 இலட்சம் லீஸ் தொகை கொடுத்ததும், ரூ.2 இலட்சத்தை அவசரமாக தேவை என்று கடனாக பெற்று செலவளித்துள்ளார். இந்த கடன் தொகைக்கு வட்டியும் வராத நிலையில், பணம் வழங்கும் வரை அந்த வீட்டிற்கு யாரும் வாடகைக்கு வர கூடாது என்று எண்ணி ராஜாவின் மகன் சங்கர் பூட்டு போட்டதும், பூட்டை உடைக்கும் தகராறில் ஸ்ரீராம் உயிரிழந்ததும் தெரியவந்துள்ளது. இந்த கொலை தொடர்பாக சங்கர் (வயது 28) மற்றும் அவரது தாய் பானு (வயது 46) ஆகியோரை காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Arumbakkam College Student Murder due to Fight police investigation


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->