அந்த 9000 கோடி யாருடையது? வருமான வரித்துறைக்கு சென்ற விவகாரம்! விடாமல் விரட்டும் ராஜ்குமார்! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டம், பழனி அடுத்த நெய்க்காரன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார். சென்னை கோடம்பாக்கத்தில் அறை எடுத்து தங்கி கால் டாக்ஸி ஓட்டுநராக பணிபுரிந்து வரும் ராஜ்குமாரின் வங்கி கணக்கில் கடந்த ஒன்பதாம் தேதி மதியம், ரூபாய் ஒன்பதாயிரம் கோடி டெபாசிட் செய்யப்பட்டதாக எஸ்எம்எஸ் வந்துள்ளது.

ஒன்பதுக்கு அருகே பல பூஜியங்கள் இருந்ததால் அது எவ்வளவு ரூபாய் என்று கூட ராஜ்குமாருக்கு தெரியவில்லை. அவரின் வங்கி கணக்கில் 105 ரூபாய் மட்டுமே இருந்த நிலையில், யாரோ தன்னை ஏமாற்றுவதற்காக இப்படியான ஒரு எஸ்எம்எஸ்-யை அனுப்பி உள்ளதாக நினைத்துள்ளார் ராஜ்குமார்.

இருப்பினும் சந்தேகம் அடைந்த ராஜ்குமார் இதுகுறித்து நடத்திய விசாரணையின் முடிவில், தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் இருந்து தான் அந்த எஸ்எம்எஸ் வந்துள்ளது என்பதையும், தனது வங்கி கணக்கில் ஒன்பதாயிரம் கோடி ரூபாய் பணம் வர வைக்கப்பட்டுள்ளதையும் கண்டு இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளார்.

உடனடியாக அதனை சரி பார்ப்பதற்காக தனது நண்பருக்கு 21 ஆயிரம் ரூபாய் அனுப்பி பார்த்துள்ளார். அதன்மூலம் அவரின் வங்கி கணக்கில் ஒன்பதாயிரம் கோடி ரூபாய் இருப்பது உறுதியானது.

ராஜ்குமாரின் வழக்கை அடுத்த 30 நிமிடங்களில் திகிலாக மாறியது. வங்கியில் இருந்து ராஜ்குமாரை தொடர்பு கொண்ட அதிகாரிகள், தவறுதலாக உங்களது கணக்கில் ஒன்பதாயிரம் கோடி ரூபாய் செலுத்தப்பட்டதாகவும், உடனடியாக அதனை திருப்பி வங்கியில் ஒப்படைக்குமாறும் தெரிவித்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜ்குமார், வழக்கறிஞர் ஒருவர் துணை உடன், தி.நகரில் உள்ள வங்கிக் கிளைக்கு சென்றார்.

அங்கு நடந்த பேச்சுவார்த்தையின் முடிவில், ராஜ்குமார் செலவு செய்த 21,000 பணத்தை திருப்பி தர வேண்டாம் என்றும், அவருக்கு லோனில் ஒரு கார் ஒன்று வழங்குவதாகவும் வாங்கி தரப்பில் பேசி முடிக்கப்பட்டது.

 இந்த விவகாரம் தமிழக முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், அந்த ஒன்பதாயிரம் கோடி ரூபாய் யாருடைய பணம்? எந்த வங்கிக் கணக்கிலிருந்து அவருக்கு அனுப்பப்பட்டது? அதற்கு முறையாக வரி செலுத்தப்பட்டதா? இல்லை அரசியல் பிரமுகரின் பணமா? அல்லது அரசு பணமா என்ற கேள்விகள் எழத் தொடங்கியது.

இந்த நிலையில், தனது வங்கி கணக்கில் ஒன்பதாயிரம் கோடி ரூபாய் வந்த பணம் குறித்து வருமானவரித்துறை அதிகாரியிடம் கால் டாக்ஸி ஓட்டுனர் ராஜ்குமார் புகார் அளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai 9000 crore wrong Transaction issue


கருத்துக் கணிப்பு

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள், "2024 மக்களவை" தேர்தலில் எதிரொலிக்குமா?Advertisement

கருத்துக் கணிப்பு

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள், "2024 மக்களவை" தேர்தலில் எதிரொலிக்குமா?
Seithipunal
-->