நாட்டிற்காக என்னோடு நில்.. நாம் வெல்வோம்.. செங்கல்பட்டு கூட்டத்தில் சீமான் பேச்சு.! - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுடன் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் கலந்தாய்வில் கலந்துகொண்டார். இதன்போது சீமான் பேசுகையில், " காங்கிரஸ், பாஜக கட்சிகள் வேறு வேறு கிடையாது. கட்சியின் சின்னம், கொடி போன்றவை மட்டுமே மாறியிருக்கும்.

பிரபாகரன் எனக்கு கோடிகோடியாக பணம் கொடுக்கவில்லை. தமிழ் இனத்தின் விடுதலை கொள்கையை தந்தார். எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவிற்கு கிடைத்த வாக்குகள், திமுக குடும்பத்தின் மீது இருந்த வெறுப்பு காரணமாக கிடைத்தது.

திராவிட திருடர்கள் பல கதைகளை விடுவார்கள். கிராமசபை கூட்டத்தில் மக்கள் கொடுத்த மனுவை கூட வாசிக்க தெரியாத ஸ்டாலின், கறவை மாடு கேட்டதற்கு காணாமல் போன மனைவியை கண்டறிந்து தர வேண்டும் என்று வாசிக்கிறார். 

அதானி துறைமுக திட்டத்தால் தலைநகர் சென்னையே வெள்ளத்தில் மூழ்கும். 7 ஆம் தேதி திருப்போரூரில் தொடங்கும் போராட்டம், நாகப்பட்டினம் வரை நடைபெற இருக்கிறது. முதலில் நம்மை தவிர்த்தார்கள், பின்னர் விமர்சித்தார்கள், கடுமையாக திட்டுவதற்குள் நாம் வெற்றியை அடைவோம்.  

நமது கோட்பாடே பெண்ணும் - ஆணும் சமம். பெண் விடுதலையில் மண் விடுதலை இல்லை என்பது பாரதியின் கூற்று. அதனை ஏற்று நாம் நடக்க வேண்டும். 234 தொகுதியிலும் நானே வெவ்வேறு முகத்திலும், பெயரிலும் போட்டியிடுகிறேன் என்பதை நினைவில் வைத்து பணியாற்ற வேண்டும்.

சட்டமன்ற தேர்தலில் நாம் வெல்வோம். தனியாக உறுதியாக இருப்பதை கண்டு மக்கள் நம்மை புரிந்துகொள்கிறார்கள். இந்திய இராணுவ வீரர்கள், காவல் துறை அதிகாரிகள் அஞ்சல் வாக்குகளை பெரும்பாலும் நமக்கு செலுத்தியுள்ளார்கள். நாட்டிற்காக என்னோடு நில். நமது வேட்பாளர்களை ஆதரித்து தீவிர களப்பணியாற்ற வேண்டும் " என்று பேசினார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chengalpattu Naam Tamilar Katchi Seeman Speech 2 Feb 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->