தமிழகத்தில் 14  மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் - Seithipunal
Seithipunal


வளி மண்டல கீழடுக்கு சுழற்சிக் காரணமாக இன்று 14 மாவட்டங்களில்  கன மழை பெய்யும்' என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது . அந்த தகவலில் ,

தமிழக பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதனால் சில மாவட்டங்களில் கன மழையும்,  இன்னும் சில மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யும்  என்றும், சென்னையில் காலை நேரத்தில் வானம் மேகமூட்டமாக காணப்படும் என்றும், சில இடங்களில், லேசான மழை பெய்யும்.

இதையடுத்து ,நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல்,  துாத்துக்குடி, திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர், சிவகங்கை மற்றும் மாவட்டங்களில், இன்று கன மழை பெய்யும். மற்ற மாவட்டங்களில், நாளை முதல் மிதமான மழை பெய்யும்.

நேற்று காலை நிலவரப்படி, திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு மற்றும் கலசப்பாக்கத்தில், 4 செ.மீ., மழை பெய்துள்ளதாகவும் செங்கம், அவலாஞ்சி, பூந்தமல்லி, 3; செம்பரம்பாக்கம், திருவண்ணாமலை, ஆத்துார், சென்னை விமான நிலையம் மற்றும் கொரட்டூரில், 2 செ.மீ., மழை பெய்துள்ளதாகவும்  அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chance of rain in 14 districts of Tamil Nadu


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->