ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் செயின் பறிப்பு.! - Seithipunal
Seithipunal


குமரி மாவட்டம் இரணியல் அருகே ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம்  2½ பவுன் தங்க சங்கிலியை மர்மநபர்கள் பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குமரி மாவட்டம் இரணியல் அருகே சமீபத்தில் ஒரு செயின் பறிப்பு சம்பவம் நடந்தது,இந்தநிலையில் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது.குமரி மாவட்டம் இரணியல் அருகே நெய்யூர் மாங்குழி பகுதியை சேர்ந்தவர் தனிஸ்லாஸ். இவருடைய மனைவி மேரி ஏஞ்சல்,70 வயதான இவர் சம்பவத்தன்று ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு மருந்து வாங்க சென்றார்.

அப்போது  நாகர்கோவிலில் இருந்து திருநைனார்குறிச்சி வழியாக திங்கள்சந்தைக்கு செல்லும் பஸ்சில் ஏறி அந்த மூதாட்டி ஊருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பஸ் மூங்கில்விளை பகுதியில் சென்றபோது, மேரி ஏஞ்சல் தனது கழுத்தில் கிடந்த 2½ பவுன் செயின் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனே பஸ்சை நிறுத்தும்படி கண்டக்டரிடம் கூறிய தையடுத்து டிரைவர் பஸ்சை நிறுத்தினார். அதைதொடர்ந்து பஸ் முழுவதும் மேரி ஏஞ்சல் தேடிபார்த்தும்  நகை கிடைக்கவில்லை. பஸ்சில் கூட்டநெரிசலை பயன்படுத்தி யாரோ மர்ம ஆசாமி மேரி ஏஞ்சலிடம் நகை அபேஸ் செய்துவட்டு தப்பி சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து மேரி ஏஞ்சல் மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chain snatching from an old woman in the moving bus


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->