சி.பி.ஐ. அதிகாரிக்கு கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்த நபர்., கையும் களவுமாக சிக்கிய பின்னணி! - Seithipunal
Seithipunal


சென்னை வானகரத்தில் இயங்கி வரும் கட்டுமான நிறுவனமான ‘சோமா எண்டர்பிரைசஸ்’. இந்த நிறுவனத்துக்கு எதிராக நிலுவையில் உள்ள சி.பி.ஐ. வழக்கின் விசாரணைகளை தங்கள் நிறுவனத்துக்கு சாதகமாக்குவதற்காக அந்த நிறுவனத்தின் துணை தலைவர் ராமச்சந்திர ராவ், மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் சிலரையும், புரோக்கர்கள் சிலரையும் அடிக்கடி சந்தித்து பேசி உள்ளார்.

 
இதற்கு பின்னர், மத்திய உள்துறை அமைச்சகத்தின் போலீஸ் பிரிவுவில் நியமிக்கப்பட்டுள்ள தீராஜ் சிங் என்பவர் உதவியுடன், சி.பி.ஐ.(ஊழல் தடுப்பு பிரிவு) டி.ஐ.ஜி. அஸ்ரா கார்க்கையும் ராமச்சந்திர ராவ் சந்தித்து பேசி உள்ளார். இந்த நிலையில், சி.பி.ஐ. வழக்கை தங்கள் நிறுவனத்துக்கு சாதகமாக்குவதற்காக ராமச்சந்திர ராவ் தரப்பிலிருந்து அஸ்ரா கார்க்குக்கு 2 கோடி ருபாய் பேரம் பேசப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக உடனடியாக  தனது அதிகாரிகளிடம் மூத்த அஸ்ரா கார்க் தெரிவித்து உள்ளார். இதையடுத்து அஸ்ரா கார்க் கொடுத்த புகாரின் அடிப்படையில், மூத்த அதிகாரிகள் வகுத்து கொடுத்த திட்டத்தின்படி, உள்துறை அதிகாரி தீராஜ் சிங் மற்றும் புரோக்கர் தினேஷ் சந்த் குப்தா உள்ளிட்டோர் சி.பி.ஐ.(ஊழல் தடுப்பு பிரிவு) டி.ஐ.ஜி. அஸ்ரா கார்க் அலுவலகத்துக்கு ரூ.2 கோடி லஞ்ச பணத்தை கொண்டு வந்த போது கையும், களவுமாக சிக்கினர்.

பிடிபட்ட இரண்டு பேரிடமும் இருந்து பெறப்பட்ட வாக்குமூலம் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் ‘சோமா எண்டர்பிரைசஸ்’ நிறுவனத்தின் துணை தலைவர் ராமச்சந்திர ராவ் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். அவரிடம் உயர் போலீஸ் அதிகாரிகள் தீவீர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்போது சி.பி.ஐ (ஊழல் தடுப்பு பிரிவு) டி.ஐ.ஜியாக பணியாற்றி வரும் அஸ்ரா கார்க் தமிழக அரசு பணிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு மதுரை, தர்மபுரி மாவட்டங்களின் எஸ்.பி.யாக பணிபுரிந்து நேர்மையான, போலீஸ் அதிகாரி என பெயர் பெற்றவர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cbi corruption case


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->