சோதனையில் பிடிபட்ட 13 கிலோ கஞ்சா! - Seithipunal
Seithipunal


பிடிபட்ட கஞ்சாவின் மதிப்பு 72 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் என மதிப்பீடு!

தமிழகத்தில் கஞ்சாவின் புழுக்கம் அதிகரித்து வரும் நிலையில் தமிழக டிஜிபி உத்தரவு பேரில் கஞ்சா 2.0 என்ற திட்டத்தின் கீழ் பல்வேறு பகுதிகளில் பல கட்ட சோதனைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில் தென்னக ரயில்வே பாதுகாப்பு படை சென்னை டிவிஷன் சீனியர் கமிஷனர் செந்தில் மற்றும் அரக்கோணம் ரயில்வே பாதுகாப்பு படை உதவி கமிஷனர் ஏகே பிரதீப் உத்தரவின் பேரில் காட்பாடி ரயில்வே பாதுகாப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அவ்வாறு மேற்கொண்ட சோதனையில் டாட்டா நகரில் இருந்து காட்பாடி வழியாக கேரளா மாநிலம் எர்ணாகுளம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் அதிரடியாக சோதனை மேற்கொண்டு உள்ளனர். ரயிலின் பொது பிரிவு பயணிகள் பயணிக்கும் இருக்கைக்கு அடியில் ஆறு பிளாஸ்டிக் பை மூட்டை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து அந்த மூட்டைகளை சோதனை செய்ததில் மொத்தம் 13 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது.

இதன் மதிப்பீடு சுமார் 72 லட்சத்து 60 ஆயிரம் இருக்கும் என ரயில்வே போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்த கஞ்சா மூட்டைகளை போதை பொருள் நுண்ணறிவு போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். இதுகுறித்து வேலூர் சரக போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cannabis seized in katpadi railway station


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->