4 ஆவது நாளாக தொடரும் போராட்டம்.. என்ன நடக்கிறது பழைய வண்ணாரப்பேட்டையில்.?!  - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள பழைய வண்ணாரப்பேட்டை அருகே நேற்று இரவு குடியுரிமை சட்டத்திற்கு எதிராக இஸ்லாமியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். வெகு நேரமாக போராட்டத்தில் இருந்த அவர்களை கலைந்து செல்ல போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். இதன் காரணமாக போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் மத்தியில் தகராறு ஏற்பட்டுள்ளது.

மேலும் தடியடி நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சுமார் 120 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை கண்டித்து பெண்கள் உட்பட ஏராளமானோர் போராட்டத்தை தொடர்ந்தனர். இதனால் சம்பவ இடத்திற்கு வந்த சென்னை காவல் ஆணையர் ஏ கே விஸ்வநாதன் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

அப்பொழுது, கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று கூறியும் அவர்கள் மீண்டும் போராட்டத்தை நள்ளிரவுவரை தொடர்ந்தனர். மேலும், தற்போது வரையிலும் போராட்டம் நீண்டு கொண்டுதான் இருக்கிறது. இதைதொடர்ந்து திருவல்லிக்கேணி, பாரிமுனை, பிராட்வே, கிண்டி, ஆலந்தூர் ஜிஎஸ்டி சாலை உள்ளிட்ட இஸ்லாமியர் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இதன் காரணமாக போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட போது இஸ்லாமிய முதியவர் ஒருவர் போலீசாரால் தாக்கப்பட்டு இருந்ததாக சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி பரவி வருகிறது. இதனை சென்னை போலீசார் பொய்யான செய்தி என்று தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் CAAக்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் 4 ஆவது நாளாக போராட்டம் இன்று தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதே போல் மதுரை மகபூப்பாளையம் ஜின்னா திடல் பகுதியிலும்  4 ஆவது நாளாக போராட்டம் தொடருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CAA protest continue for fourth day


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->