கன்னியாகுமாரி.! பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் பேருந்து மீது மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் உதியார்விளை பகுதியை சேர்ந்த இளைஞர் உறவுக்கார சிறுமியுடன் திங்கள்நகர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்பொழுது சாலையின் வளைவான பகுதியில் முன்னாள் சென்ற பேருந்தை முந்திச் செல்ல முயன்ற போது எதிரே வந்த அரசு பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Bus twowheeler accident in kanniyakumari


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->