#திருப்பத்தூர்:: ஆம்பூரில் மணல் திருட்டில் ஈடுபட்ட மாட்டு வண்டிகள் சிறை பிடிப்பு..!! - Seithipunal
Seithipunal


திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா ஆம்பூர் பகுதிகளில் நேற்று அதிகாலை ரோந்துப்பணியில் ஈடுபட்ட பொழுது ஆம்பூர் அடுத்த சான்றோர்குப்பம் பகுதி வழியாக எதிரே 2 மாட்டு வண்டிகளில் திருட்டு மணல் கடத்தி வருவதை பார்த்துள்ளார்.

அந்த மாட்டு வண்டிகளை வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா தடுத்து நிறுத்திய நிலையில் அரசு அதிகாரியை கண்டதும் மாட்டு வண்டிகளில் வந்த 3 பேர் வண்டிகளை சாலையில் நிறுத்திவிட்டு தப்பியோடினர்.

இதனைத் தொடர்ந்து ஆம்பூர் நகர காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பிறகு வருவாய் கோட்டாட்சியர் மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து மணல் கடத்திய நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய காவல் துறையினருக்கு உத்தரவிட்டார். இதனை அடுத்து 2 மாட்டு வண்டிகளை மணலுடன் பறிமுதல் செய்த ஆம்பூர் நகர போலீசார் மணல் திருடிய மாட்டு வண்டி உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்து வலை வீசி தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bullock carts involved in sand theft in Ambur arrested


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->