வாரிசு சான்றிதழ் வாங்க ரூ.10,000 லஞ்சம்.. வட்டாட்சியரை கைது செய்த லஞ்ச ஒழிப்புத் துறை.! - Seithipunal
Seithipunal


கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா சின்னதாராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவர், தனது தந்தை இறந்த நிலையில் வாரிசு சான்றிதழ் பெறுவதற்காக அரவக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் பதிவு செய்துள்ளார்.

அவரிடம் விசாரணை நடத்திய வட்டாட்சியர் எம்.ராஜசேகரன், வாரிசு சான்றிதழ் வேண்டுமானால் 10,000 ரூபாய் லஞ்சம் தர வேண்டும் எனக் கேட்டுள்ளார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத பழனிச்சாமி, இதுகுறித்து கரூர் லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து லஞ்ச ஒழிப்புத் துறையினர், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை பழனிச்சாமியிடம் கொடுத்தனர்.

அந்த பணத்தை, அரவக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் வட்டாட்சியர் ராஜசேகரனிடம் பழனிச்சாமி கொடுத்தபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் ராஜசேகரனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bribery of Rs. 10,000 to buy inheritance certificate Anti-bribery department arrested district officer


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->