புதிய குடும்ப அட்டைக்கு ரூ.2200..? வெளிப்படையாக வெளியான தகவல் - சமூக ஆர்வலர் மூலம் கசிந்த இரகசியம்..! - Seithipunal
Seithipunal


நாகை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் சங்கரன்பந்தலில் உள்ள தனியார் பொது சேவை மையத்தில் புதிதாக குடும்ப அட்டை பெற விண்ணப்பிக்க 2 ஆயிரத்து இருநூறு ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

தரங்கம்பாடி வட்ட வழங்கல் அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு சில நபர்கள் இந்த மையத்தில் கூட்டு வைத்துக் கொண்டு பதிவு கட்டணம் 200 என்றும், வட்ட வழங்கல் அலுவலர் உள்ளிட்ட அலுவலர்களுக்கு 2 ஆயிரம் என விண்ணப்பிக்கும் போதே வெளிப்படையாக பணத்தை பெற்று விடுகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் ஸ்மார்ட் கார்டு வந்த உடன் சில ஆயிரங்களை அளித்து விட்டு தான் அதைபதிவு செய்வதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் புகார் கூறுகின்றனர்.

சங்கரன்பந்தல், பூதனூர் பகுதியை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்தவர்களும் இந்தமையத்தில் குடும்ப அட்டைக்காக பணத்தை அளித்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, இங்கு ஆன்லைனில் பொதுமக்களுக்கு சேவை அளிக்கிறோம் என்ற பெயரில் பித்தலாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர் .

இது போன்ற பொது சேவை மையங்கள் என பெயர்பலகையை வைத்துக் கொண்டு அப்பாவி மக்களை ஏமாற்றிபணம் பறிக்கும் தனியார் மையங்கள் ஆங்காங்கே தற்போதுமுளைத்துள்ளது.

ஏற்கனவே புதிதாக குடும்ப அட்டை வேண்டுமெனில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் வட்ட வழங்கல் அலுவலகத்தில் சில நூறு ரூபாய்களை செலவு செய்தால் போதும்.

ஆனால் தற்போது ஒரு சில தனியார் மையங்கள் அதிகாரிகளிடம் கூட்டுவைத்துக் கொண்டு பல ஆயிரம் ரூபாய்களை தயக்கமின்றி வாங்குகின்றனர்.

சங்கரன்பந்தலில் உள்ள குறிப்பிட்ட அந்த மையத்தில் விண்ணப்பிக்கும் போதே 200 கட்டணம், 2 ஆயிரம் வட்ட வழங்கல் அலுவலகத்துக்கு என எந்த வித தயக்கமுமின்றி கூறுகின்றனராம்.

உடனடியாக மாவட்ட ஆட்சியர் இது போன்ற பணம் பறிக்கும் மையங்களின் மீது நடவடிக்கை எடுப்பதோடு, பொது சேவை மையங்கள் என உள்ள தனியார் மையங்களில் உரிய ஆய்வினை மேற்கொள்ள வேண்டும்

கூட்டு வசூல் கொள்ளையை தடுக்கவில்லையெனில் போராட்டங்களை நடத்தப்படும் என்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bribery for new ration card


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->