லஞ்சம் பெற்ற வழக்கு: தள்ளுபடி செய்த அமலாக்கத் துறை அதிகாரியின் ஜாமீன் மனு! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர் சுரேஷ்பாபுவிடம் மதுரை அமலாக்கத் துறை அதிகாரி, ரூ.40 லட்சம் லஞ்சம் பெற்ற வழக்கில் கடந்த 1 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். 

மாநில ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு காவல்துறையினர், விசாரணைக்கு பிறகு திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 

அவரை நீதிமன்ற காவலில் கடந்த 15ஆம் தேதி வரை வைக்க தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் உத்தரவிட்டார். 

அதன்படி சிறையில் அடைக்கப்பட்ட அமலாக்கத் துறை அதிகாரி, சிறைத் துறை அதிகாரிகளின் பரிந்துரைப்படி மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.

இந்த நிலையில் அமலாக்கத் துறை அதிகாரி தரப்பில் ஜாமீன் வழங்க வேண்டும் என திங்கள்கிழமை திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த ஜாமீன் மனு மதுரையைச் சேர்ந்த வழக்குரைஞர்கள் மூலம் தாக்கல் செய்யப்பட்டு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தபோது, ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு காவல்துறையினர் தரப்பில் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. 

காவல்துறையினரின் வாதங்களை ஏற்று, அமலாக்கத் துறை அதிகாரியின் ஜாமீன் மனுவை  தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bribery case Bail dismissed ​​enforcement officer 


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?
Seithipunal
--> -->