சிறுமியை கடத்தி சீரழித்த வாலிபர்.. தந்தை-மகன் போக்சோவில் கைது.! - Seithipunal
Seithipunal


சிறுமியை கடத்திய தந்தை மகன் இருவரையும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியில் 16 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இந்த நிலையில் சிறுமியை காணவில்லை என அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த சந்தோஷ் என்ற வாலிபர் சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து தனிப்படை அமைத்து காவல் துறையினர் அங்கு விரைந்து சென்று சிறுமியை பத்திரமாக மீட்டனர்.

மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சந்தோஷ் சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது. மேலும் இதற்கு சந்தோஷின் தந்தை சம்பத் என்பவரும் உடந்தையாக இருந்துள்ளார். இதனால் தந்தை மகன் ஆகிய இருவரையும் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Boy cheat kidnapped 16 years old girl


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..


செய்திகள்



Seithipunal
--> -->