வானகரம் சுடுகாட்டில் ரத்தக் காயங்களுடன் வாலிபர் சடலம்...! - கொலையா? விபத்தா? திருவேற்காடு காவலர்கள் தீவிர விசாரணை...! - Seithipunal
Seithipunal


சென்னை வானகரம் அருகேயுள்ள மேட்டுக்குப்பம் சாலையில் அமைந்துள்ள சுடுகாட்டு பகுதியில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த நிலையில் கிடப்பதாக கிடைத்த தகவலால் பரபரப்பு நிலவியது.

இதையடுத்து திருவேற்காடு காவலர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது உயிரிழந்திருந்த இளைஞரின் முகம் மற்றும் உடலின் பல பகுதிகளில் காயத்தடங்கள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், உயிரிழந்தவர் திருவேற்காட்டை சேர்ந்த வீரா (30) என்பதும், கூலி தொழிலாளியாக பணியாற்றி வந்ததும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், மது போதையில் சென்றபோது தவறி கீழே விழுந்ததால் காயமடைந்து உயிரிழந்தாரா?அல்லது மர்ம நபர்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாரா? என்ற பல்வேறு கோணங்களில் திருவேற்காடு காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Body young man found bloody wounds Vanagaram crematorium Murder Accident Thiruverkaud police investigating intensively


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..


செய்திகள்



Seithipunal
--> -->