வெளியானது ப்ளூ ஸ்டார் படத்தின் ட்ரெய்லர்.! - Seithipunal
Seithipunal


எஸ்.ஜெயகுமார் இயக்கத்தில், நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் சாந்தனு உள்ளிட்டோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் 'ப்ளூ ஸ்டார்'. இந்தப் படத்தில், கீர்த்தி பாண்டியன், பிரித்விராஜன், பகவதி பெருமாள் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

லெமன் லீப் கிரியேஷன் பிரைவேட் லிமிடெட் மற்றும் நீலம் புரொடக்சன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். தமிழ் ஏ அழகன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

செல்வா ஆர்.கே. படத்தொகுப்பு மேற்கொள்ளும் இந்தப் படத்தின் பாடல் ஒன்று அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், இந்தப் படம் வரும் 25-ம் தேதியன்று உலகமெங்கும் வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தனர். 

இந்த நிலையில் இந்தப் படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, இன்று மாலை 6 மணிக்கு படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

blue star movie trailer released


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->