மதக்கலவரத்தை தூண்டி குளிர்காய நினைக்கும் திமுக - பாஜக வேலூர் இப்ராஹிம் குற்றச்சாட்டு.! - Seithipunal
Seithipunal


திமுக மற்றும் அதன் கூட்டணிக்கட்சிகள் மதக்கலவரத்தை தூண்டி குளிர்காய நினைப்பதாக பாஜக வேலூர் இப்ராஹிம் தெரிவித்தார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தருமபுரம் ஆதீனத்தில், தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணியின் தேசிய செயலாளர் வேலூர் எம். சையத் இப்ராஹிம், தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி ஞானசம்பந்த பரமாசாரிய சாமிகளை சந்தித்து அருள்பெற்றார். 

இவருடன், அகில பாரதிய சந்நியாசிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் வேதானந்த ஆனந்தா, மத்திய அரசுத்தரப்பு வழக்கறிஞர் இராஜேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. 

இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய வேலூர் இப்ராஹிம், " தமிழ்நாட்டில் திமுக மற்றும் அதன் கூட்டணிக்கட்சியினர் திட்டம் தீட்டி பாரதிய ஜனதா கட்சியை மதவாத கட்சி என்றும், இஸ்லாமியர்களுக்கு எதிரான கட்சி என்றும் பொய்யான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்து - இஸ்லாமிய மக்களிடையே நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில் உள்ளது. 

திமுக தமிழக அரசாக பொறுப்பேற்றதில் இருந்து மத்திய அரசுக்கு எதிரான பிரிவினைவாத, பயங்கரவாத சக்திகள் ஊக்கம் பெற்றுள்ளது. அவர்களின் பேச்சு மத்திய அரசின் இழிவுபடுத்தும் வகையிலும், வன்முறையை தூண்டும் விதத்திலும் இருக்கிறது. 

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இதனை ஊக்குவித்தால் அமைதிப்பூங்காவாக இருக்கும் தமிழகம் மதக்கலவரத்தால் பாதிக்கப்படும் என்ற அச்சம் எழுகிறது. இந்து மதத்தை இழிவுபடுத்தி பேசும் நபர்களின் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

தமிழக மக்களிடையே அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற இயலாமல் தவிக்கும் திமுக தலைமையிலான தமிழக அரசு, மக்களிடையே மத்திய அரசுக்கு எதிரான கருத்துக்களை பரப்பி அவர்களை திசை திருப்பி வருகிறது. உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தில் காவல் துறையினரை வைத்து கொடுக்கும் நெருக்கடிக்கு அஞ்சமாட்டோம் " என்று தெரிவித்தார். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP Vellore Ibrahim Pressmeet about DMK Politics in Tamilnadu 2 Oct 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->