காவல் நிலையத்தில் தீக்குளித்த பாஜக நிர்வாகி - அண்ணாமலை எச்சரிக்கை.! - Seithipunal
Seithipunal


காவல் நிலையத்தில் தீக்குளித்த பாஜக நிர்வாகி - அண்ணாமலை எச்சரிக்கை.!

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி ஒன்றியத்தின் பாஜக துணைத் தலைவராக இருக்கும் தமிழ்ச்செல்வன் பார்த்திபனூர் காவல் நிலையத்தில் தீக்குளித்த சம்பவம் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:- 

"தமிழகக் காவல்துறையின் பொய் வழக்குகள் மற்றும் தொடர்ச்சியான அடக்கு முறையின் காரணமாக, துடிப்பான இளைஞரான பரமக்குடி ஒன்றிய பாஜக துணைத் தலைவர் தமிழ்ச்செல்வன் பார்த்திபனூர் காவல் நிலையத்தில் தீக்குளித்துள்ளார் என்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்.

தமிழகக் காவல்துறை முழுக்க முழுக்க திமுகவின் ஏவல்துறையாகவே மாறியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை மறந்து, ஆளுங்கட்சியினர் தூண்டுதலுக்கேற்ப, பாஜகவினரை மிரட்டுவதையும் துன்புறுத்துவதையும் பொறுத்துக்கொள்ள முடியாது. 

காவல்துறையின் அடக்குமுறையை எதிர்த்து ராமநாதபுரம் மாவட்ட பாஜக தலைவர் தரணி முருகேசன் மற்றும் இளைஞரணி மாநிலத் தலைவர் சிவா, காவல்நிலையத்தின் முன் போராட்டம் நடத்தியுள்ளனர்.

காவல்துறையினரின் இது போன்ற பாரபட்சத் தன்மை தொடருமேயானால், தமிழகம் முழுவதும் பாஜகவினரின் எதிர்ப்பை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

bjp leader annamalai warning for bjp excuetive sucide attempt in police station


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->