பொழியும் அன்பு: மத்தியில் 3-வது முறையாக ஆட்சி... பிரதமர் மோடி உறுதி.! - Seithipunal
Seithipunal


மத்தியில் மூன்றாவது முறையாக பா.ஜ.க ஆட்சி அமைக்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் பிரதமர் நரேந்திர மோடி ரூ. 17,300 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். 

முன்னதாக நேற்று திருப்பூர், பல்லடத்தில் நடைபெற்ற என் மண் என் மக்கள் பாதயாத்திரை நிறைவு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாடினார்.

இதனை தொடர்ந்து மதுரையில் சிறு,குறு நடுத்தர தொழில் முனைவோர்களுக்கான நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்நிலையில் இன்று தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் பிரதமர் நரேந்திர மோடி சரக்கு பெட்டக முனையத்துக்கு அடிக்கல் நாட்டினார். 

அப்போது அவர் பேசி இருப்பதாவது, தமிழகத்தில் மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்கள் மறைக்கப்படுகிறது. தமிழ்நாட்டிற்கு வரும் பொழுதெல்லாம் தமிழர்கள் என் மீது பாசத்தை பொழிகின்றனர். 

தமிழகத்தில் கிடைத்துள்ள அன்பை போல தமிழகத்தின் அனைத்து பகுதி மக்களும் என் மீது அன்பை பொழிகிறார்கள். தமிழக மக்கள் என் மீது காட்டிய அன்பை பல மடங்காக திருப்பித் தருவேன். மூன்றாவது முறையாக மத்தியில் பா.ஜ.க ஆட்சி அமைக்கும் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bjp form government centre 3rd time


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?
Seithipunal
--> -->