ஈரோட்டில் போதைப்பொருள் பதுக்கிய பாஜக நிர்வாகி கைது..!! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்தை அடுத்த சிவகிரி இளங்கோ தெருவை சேர்ந்தவர் வேல்முருகன் அந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். சிவகிரி பட்டேல் தெருவில் அமைந்துள்ள இவருக்கு சொந்தமான குடோனில் ஓசூரில் இருந்து கடத்திவரப்பட்ட போதைப் பொருள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக குற்ற நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

அதன் அடிப்படையில் நேற்று அதிகாலை வேல்முருகனுக்கு சொந்தமான குடோனில் பெருந்துறை சரக காவல் உதவி கண்காணிப்பாளர் கௌதம் கோயல் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் வெங்காய மூட்டை மற்றும் அரிசி மூட்டைகளுக்கு இடையே சுமார் ஒரு டன் எடையுள்ள போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த சரக்கு வாகனத்திலும் மூட்டை மூட்டையாக போதை பொருள் இருந்தது தெரியவந்தது. 

இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த சிவகிரி போலீசார் வேல்முருகன் மற்றும் சரக்கு வாகன ஓட்டுனர் தங்கராஜ் கைது செய்தனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கர்நாடக மாநிலம் வழியாக ஓசூரில் இருந்து போதை பொருள் கடத்தி வந்து பதுக்கியது தெரியவந்தது. பாஜக பிரமுகரான வேல்முருகன் வட மாநிலத்தை மார்வாடி முதலாளிகள் மற்றும் உள்ளூர் பாஜக நிர்வாகிகள் ஆதரவுடன் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP executive arrested for stashing gutka in Erode


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->