அண்ணாமலைக்காக பண பட்டுவாடா.. பாஜக நிர்வாகியை தட்டி தூக்கிய அதிகாரிகள்.!! - Seithipunal
Seithipunal


தமிழக முழுவதும் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்க உள்ள நிலையில் நேற்று மாலை 6 மணியுடன் தேர்தல் பரப்புரை முடிவடைந்தது. 

இதனை அடுத்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா தொடர்பாக சல்லடை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

அந்த வகையில் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு பாஜகவினர் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் கோவை மாவட்டம் பூலுவப்பட்டியில் உள்ள தேநீர் கடையில் வைத்து வாக்காளர்களுக்கு வார்டு வாரியாக பிரித்து பணம் கொடுத்து கொண்டு இருந்த பாஜக பிரமுகர் ஜோதிமணியை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து 81 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் பூச்சி உள்ளவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP executive arrested for giving money to voters in Coimbatore


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->