பரபரப்பு.. விக்கிரவாண்டி அருகே பாஜக நிர்வாகி கரண்டியால் அடித்துக் கொலை.!!
bjp excuetive murder in vikravandi
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி அடுத்த ஆவடையார்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் குமரன். பாரதிய ஜனதா எஸ்.சி.,எஸ்.டி. பிரிவு ஒன்றிய தலைவராக இருந்து வந்தார்.
இதேபோல் கோலியனூர் தொடர்ந்தனூரை சேர்ந்தவர் ஜான்சன் என்பவர் விக்கிரவாண்டி அருகே ஆவடையார்பட்டில் இருந்து தொரவி செல்லும் சாலையில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள நிலத்தில் நாய் பண்ணை வைத்து நடத்தி வருகிறார்.
இந்தப் பண்ணைக்கு அருகில் உள்ள நிலத்தை குமரன் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார். இந்த நிலத்தில் விவசாய பணிக்காக ஏர் ஓட்டியபோது ஜான்சன் அதை தடுத்ததனால் இருவருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், குமரன் நேற்று மாலை 4 மணியளவில் தனது நிலத்திற்கு சென்றபோது, ஜான்சனுக்கும் குமரனுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஜான்சன் சமையல் செய்யும் ஜல்லி கரண்டியால் குமரன் தலையில் பலமாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த குமரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் படி விக்கிரவாண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றபோது அங்கிருந்த குமரனின் உறவினர்கள், கொலை செய்தவரை கைது செய்ய வேண்டும் அதன் பின்னர் தான் உடலை பிரேத பரிசோதனைக்கு எடுத்துச்செல்ல விடுவோம் என்று கூறி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் இறந்தவரின் உடலை ஆம்புலன்ஸ் மூலமாக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமைறைவான ஜான்சனை தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
bjp excuetive murder in vikravandi