தமிழகத்தில் பைக் டாக்ஸிக்கு அனுமதி இல்லை - போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் இருசக்கர வாகன டாக்ஸிகள் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது. பகுதி நேரமாக வேலை தேடுவோர், பணம் தேவைப்படுபவர்கள் தங்களது சொந்த இருசக்கர வாகனங்களை தனியார் நிறுவனத்துடன் இணைந்து அதை டாக்ஸியாக இயக்கி வருகின்றனர்.

ஆட்டோ மற்றும் வாடகை கார்களை விட இருசக்கர வாகன டாக்ஸி கட்டணம் குறைவு என்பதால் பொதுமக்கள் பெரும்பாலும் பைக் டாக்ஸியை பயன்படுத்துகின்றனர். அதற்கேற்றார் போல சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் தற்போது பைக் டாக்ஸிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரிடம், பைக் டாக்ஸி நடைமுறை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் இருசக்கர வாகனங்கள் வாடகை டாக்ஸியாக பயன்படுத்துவதை தமிழ்நாடு அரசு அனுமதிக்கவில்லை. இதற்கான மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளும் முழுமையாக இல்லை. அதேபோல் தமிழ்நாட்டில் பைக் டேக்ஸிக்கு இதுவரை அனுமதி அளிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர் ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் 2400 புதிய பெண்களை வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் அடுத்த 6 மாதங்களில் பேருந்து எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும் 2000 புதிய பேருந்துகள் வாங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bike taxi not allowed in tamilnadu minister sivasankar


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->