ஆம்பூர் அருகே.. "காவிரி எக்ஸ்பிரஸ்" மோதி பெரும் சத்தம்.. பதறிப் போன ரயில் பயணிகள்..!! - Seithipunal
Seithipunal


திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே வீரவர் கோயில் பகுதியை இன்று காலை மைசூர்-சென்னை இடையிலான காவிரி எக்ஸ்பிரஸ் ரயில் கடந்த போது பயங்கர சத்தம் கேட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரயில் ஓட்டுநர்  அடுத்த ரயில் நிலையமான பச்சை குப்பம் ரயில் நிலையத்தில் காவேரி எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்தியுள்ளார்.

இதனை அடுத்து ரயில் ஓட்டுனர் அளித்த தகவலின் பேரில் ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் மற்றும் ரயில்வே காவல்துறையினர் ரயில் தண்டவாளத்தை ஆய்வு செய்த போது ரயில் தண்டவாளத்தில் மிகப்பெரிய கற்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் காவிரி எக்ஸ்பிரஸ் ரயிலை தவிர்க்கும் நோக்கத்தோடு தண்டவாளத்தில் கல் வைத்த மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். 

கடந்த ஜூன் 2ம் தேதி ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில் பெரும் உயிர் சேதம் ஏற்பட்டு அடங்குவதற்குள் தற்போது ஆம்பூர் அருகே ரயிலை கவிழ்க்கும் நோக்கில் கல் வைத்திருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Big stone on railway track near Ambur


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->