திருமணமான பெண்களுக்கான அழகிப்போட்டி: சாதனை படைத்த சென்னை பெண்!  - Seithipunal
Seithipunal


பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெற்ற திருமணமான பெண்களுக்கான அழகி போட்டியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திருமணமான 100க்கும் மேற்பட்ட அழகான பெண்கள் பங்கேற்றனர். 

இந்த போட்டியில் சென்னையைச் சேர்ந்த மீனா கல்யாண் என்ற பெண்ணும் கலந்து கொண்டார். இந்த போட்டியில் நடைபெற்ற பல்வேறு சுற்றுகளிலும் மீனா கல்யாண் தொடர்ந்து முன்னேறினார். 

பின்னர் நடந்த இறுதிச்சுற்றில் இந்தியா மற்றும் தமிழ்நாட்டின் கலாச்சாரத்தை வெளிப்படுத்திய மீனா கல்யாண் அழகான பெண்மணி என்ற பட்டத்தை வென்றார். 

அழகி போட்டியில் பட்டம் பெற்று திரும்பிய மீனா கல்யாணம் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவித்திருப்பதாவது, ''எனக்கு திருமணமாகி குழந்தை பிறந்தவுடன் எனது உடல் பருமன் ஆகிவிட்டது. 

எனது உடல் பருமனை பலரும் கேலி செய்து பேசினார்கள். மேலும் சிலர் என்னிடம் என் உடல் எடையை குறைக்கவில்லை என கேட்டனர். 

இதனால் நான் மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளானேன். எனவே ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் ஏற்பட்டு மன அழுத்தத்தில் இருந்து வெளியே வர முடிவு செய்தேன். 

இதற்கு முன்னதாக இன்டர்நேஷனல் அமெரிக்கா என்ற போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளேன். தற்போது மனம் தளராமல் முயன்று பிலிப்பைன்ஸில் நடந்த திருமணமான பெண்களுக்கான அழகி போட்டியில் கலந்து கொண்டு பட்டம் வென்றேன். இதன் மூலம் எனது லட்சியத்தை முழுமையாக அடைந்து விட்டேன்'' என்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Beauty pageant for married women Chennai woman wins


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->