திருச்சியில் இரண்டு நாட்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை.! - Seithipunal
Seithipunal


திருச்சியில் இரண்டு நாட்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை.!

திமுக தலைவரும், தமிழகத்தின் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் டெல்டா மண்டலத்துக்கான திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்களிடம் கலந்துரையாடுவதற்காக இரண்டு நாள் பயணமாக திருச்சிக்கு வருகிறார்.

அதன் படி இன்று காலை சென்னையிலிருந்து விமானம் மூலம் புறப்பட்டு திருச்சி வரும் இவர், இன்று மாலை நடைபெறும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார். 

அதனைத் தொடர்ந்து இரவு திருச்சியில் தங்கும் முதல்வர் ஸ்டாலின்,  நாளை உழவர் நலத்துறை சார்பில் நடைபெறும் வேளாண் சங்கமம் 2023 கண்காட்சி மற்றும் கருத்தரங்கு திறப்பு விழாவில் கலந்து கொள்கிறார்.

இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு கருதி திருச்சியில் இன்றும், நாளையும் ட்ரோன்கள் பறக்க தடை விதித்து மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் உத்தரவிட்டுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் "ஜூலை 26, 27 உள்ளிட்ட இரண்டு தினங்களில் தடையை மீறி ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க விடும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ban on drone fly in trichy


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->