காவிரியாற்றில் 5வது நாளாக குளிக்க தடை! - Seithipunal
Seithipunal


ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 43 ஆயிரம் கன அடியில் இருந்து 65 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது.இதனால ஒகேனக்கல்காவிரியாற்றில் 5வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழக-கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழையின்  காரணமாக கடந்த ஒருவார காலமாக கர்நாடக அணைகளான கபிணி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால்  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கர்நாடக அணைகளில் இருந்து உபரிநீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஒருவார காலமாக நீர்வரத்து உயரத் தொடங்கியது.

நேற்றைய தினம் ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 43 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது. நீர்வரத்து உயர்ந்ததை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒகேனக்கல் காவிரி ஆற்றிலும், அருவிகளிலும் பொதுமக்கள் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வரும் நிலையில், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டடுள்ளது.

இந்த நிலையில், தற்போதைய நிலவரப்படி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 65 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வரும் நிலையில், தீவிர பாதுகாப்பு பணிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ban on bathing in the Kaveri River for the 5th consecutive day


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->