மைல் கல்லுக்கு படையலிட்டு ஆயுத பூஜை கொண்டாடிய நெடுஞ்சாலை துறை பணியாளர்கள்.! - Seithipunal
Seithipunal


கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவியையும், நம் தொழிலுக்கும், ஜீவனத்திற்கும் துணை புரியும் கருவிகளையும், பூஜை செய்து வணங்கும் நாள்தான் சரஸ்வதி பூஜை.

இது நவராத்திரி திருவிழாவின் மிக முக்கியமான பகுதியாகும். அரக்க மன்னன் மகிஷாசுரன் 8 நாட்கள் கடுமையான போருக்குப் பிறகு துர்கா தேவியால் கொல்லப்பட்டான். அசுர ராஜாவைக் கொன்ற பிறகு, தேவியின் ஆயுதங்கள் பூஜைக்காக வைக்கப்பட்டன. 

இதை நினைவுகூரும் வகையில், இன்றைய தினத்தில் ஆட்டோ, பேருந்து ஓட்டுநர்கள், வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர்கள், பல்வேறு நிறுவனங்கள் மற்றும் கடைகளில் வேலை செய்யும் நபர்கள் தாங்கள் பணிபுரியும் இடங்களை தூய்மையாக்கி சந்தனம், குங்குமம் வைத்து, பொரி, பழங்கள், இனிப்புகள் உள்ளிட்டவற்றை வைத்து பூஜை செய்வார்கள். 

மேலும் வாழை மரக்கன்றுகள் கட்டியும், மலர் மாலை அணிவித்தும், பூசணிக்காய் உடைத்தும், அவர்கள் செய்யும் தொழிலுக்கு பயன்படுத்தும் அனைத்து பொருட்களுக்கும் பூஜை செய்வார்கள். 

இந்நிலையில், கரூர் மாவட்டம் உப்பிடமங்கலம் அருகே, நெடுஞ்சாலை பணியாளர்கள் சாலையோர மைல் கல்லுக்கு மாலை அணிவித்து, வாழை மரக்கன்று கட்டியும், பொரி, பழங்கள் வைத்து படையலிட்டு, தேங்காய் உடைத்து ஆயுத பூஜையை சிறப்பாக கொண்டாடினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ayudha Puja celebration by highway department employees


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->