ஆவினில் பாயசம் மிக்ஸ், நூடுல்ஸ் உள்ளிட்ட புதிய பொருட்களை அறிமுகம் -தமிழக முதல்வர் - Seithipunal
Seithipunal


தமிழக அரசின் ஆவினில் பாயசம் மிக்ஸ், நூடுல்ஸ் உள்ளிட்ட 5 புதிய பொருட்களை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் நாளொன்றுக்கு 25 லட்சம் லிட்டர் ஆவின் பால் விற்பனை செய்யப்படுகிறது. இதில் சென்னையில் மட்டும் 13 லட்சம் லிட்டர் ஆவின் பால் விற்பனை செய்யப்படுகிறது.

ஆவின் நிறுவனத்தின் மூலம் தரமான பொருட்களை குறைந்த விலையில் மக்களுக்கு பயன்தரும் வகையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே பால்கோவா, ஐஸ்கிரீம், குலோப் ஜாமூன் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஆவினில் புதிதாக தயாரிக்கப்பட்ட பால் புரத நூடுல்ஸ், பாயசம் மிக்ஸ், பிரீமியம் மில்க் கேக், யோகர்ட் பானம் மற்றும் டெய்ரி ஒயிட்னர் உள்ளிட்ட ஐந்து பொருட்களை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Avin introduced 5 new products


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->