அவனியாபுரத்தில் முதல்முறையாக நடந்த அசம்பாவிதம்.! சோகத்தில் மூழ்கிய ஜல்லிக்கட்டு களம்.! - Seithipunal
Seithipunal


ஜனவரி 14 ஆம் தேதி முதல் ஜனவரி 31 ஆம் தேதி வரை வடநாடு, ஜல்லிக்கட்டு, எருது விடும் நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இன்று காலை 8 மணி அளவில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. போட்டியை அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு தொடக்கி வைத்தார். 

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 780 காளைகள், 430 மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டுள்ளனர். வாடிவாசல் வழியாக சீறிப்பாயும் காளைகளை வீரர்கள் அடக்கி வருகின்றனர்.

இந்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் முதல் முறையாக ஒரு மாடு காயம்ப்பட்டு உள்ளது.

ஜல்லிக்கட்டு மாடு காயம் பட்டு இருப்பது இதுவே முதல்முறை என்பதால் விழா கமிட்டி வருத்தத்தை தெரிவித்துள்ளது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பகுதியை சேர்ந்த கருப்புசாமி என்பவரது மாட்டிற்கு இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் காயம் ஏற்பட்டுள்ளது.

காயம்பட்ட மாட்டை கால்நடை ஆம்புலன்ஸ் மூலம் கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

AVANIYAPURAM JALLIKATTU BULL


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->